வங்காளதேசத்தில் 21 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேசத்தில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆளும் கட்சியின் உறுப்பினரான சபீர் அகமது தலுக்தர் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நடோர் என்ற இடத்தில் இந்த கொலை நடந்தது. இந்த...

போலீஸ்காரரை விடுவிக்கும் புலிகள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச் சென்ற சிங்கள போலீஸ்காரர் ஒருவரை விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய சம்மதித்துள்ளனர். இதுகுறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில, கண்காணிப்புக்...

அதிபர் மகிந்தா ராஜபக்சே கூட்டரசில் 2 தமிழர் கட்சிகள் இணைந்தன!

சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் தமிழர் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மக்கள் முன்னணியும் இணைந்துள்ளதையடுத்து அக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளனர்! சிறிலங்க நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களைக் கொண்ட...

தெற்காசிய விளையாட்டு 85 தங்கங்களுடன் இந்தியா முன்னிலை

10-வது தெற்காசிய விளை யாட்டு போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். போட்டியின் 8-வது நாளான நேற்று 4-100 மீட்டர் ரிலேயில் இந்தியா...

12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்

தீவிரவாதிகள் என்று கூறி 12 இந்தியர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்த ஆலந்து நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆலந்து நாட்டிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய அமெரிக்காவின் நாட் வெஸ்ட் நிறுவன...

நிலவில் நிலம் வாங்கிய கொல்கத்தா தம்பதி!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 100 டாலர் பணம் கொடுத்து நிலவில் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு பால் சோறு ஊட்டிய காலம் மாறி, நிலவில் குடியேறும் நாள் எப்போது...

பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில் இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில், இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தமிழர் பகுதியில் போர் விமானங்கள்...

ரூ.57 கோடி செலவில் ஐரோப்பாவிலேயே பெரிய கோவில்

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக்கோவில் இங்கிலாந்து நாட்டில் ரூ.57 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரில் டிவிடேல் என்ற இடத்தில் வெங்கடேசுவரர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே...

29 பேர் படுகொலை சம்பவம்: பிரேசில் போலீஸ்காரருக்கு 543 ஆண்டு சிறை தண்டனை

பிரேசில் நாட்டில் 29 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர் கார்வல்ஹோவுக்கு 543 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காவல்துறையில் அதிக அளவு ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டித்து கடந்த ஆண்டு மார்ச் 31-ம்...

இனிமேல் மொத்த கிரகங்கள் 8 தான் `கிரகம்’ என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது

மொத்த கிரகங்கள் 8 தான் என்ற முடிவுக்கு சர்வதேச வானியல் நிபுணர்கள் வந்துள்ளனர். அதன்படி, கிரக அந்தஸ்தை புளூட்டோ இழந்துவிட்டது. சூரியக்குடும்பத்தில் புளூட்டோவுடன் சேர்ந்து இதுவரை 9 கிரகங்கள் இருப்பதாக வானியல் நிபுணர்கள் கணித்து...

சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது

சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு இதயத் துடிப்பை சீராக்கும் "பேஸ்மேக்கர்' கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் பெயர் ஜாய் சியூயிங். சீனாவின் வடமேற்கு ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது....

விடுதலைப்புலிகளுக்கு உதவியா? அமெரிக்க டாக்டரிடம் அதிரடி சோதனை

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் சிறுநீரக சிறப்பு சிகிச்சை டாக்டராக பணிபுரிந்து வருபவர், நாகரத்தினம் ரஞ்சிதன். அவர், இலங்கை தமிழர் பகுதியான வட கிழக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் தமிழர் மறுவாழ்வு அமைப்பின் (T.R.O) தலைவராக இருந்து...

யாழ்பாணத்தில் அமைதி திரிகோணமலையில் சண்டை

கிட்டத்தட்ட இரு வாரத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் சண்டை ஏதும் இல்லாமல் அமைதி திரும்பியுள்ளது. ஆனால் கிழக்கில் உள்ள திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் தாக்கியுள்ளனர். மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை...

75 வயது முதியவர், 13 வயது சிறுமி `காதல்’ திருமணம்

பீகாரில் பேரன், பேத்தி எடுத்த 75 வயது முதியவர் ஒருவர், 13 வயது சிறுமியை காதலித்து கைப்பிடித்து உள்ளார். "சிலருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. இது பீகாரைச் சேர்ந்த 75 வயது முதியவர்...

இஸ்ரேல் ஜனாதிபதி மீது செக்ஸ் குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி மோஷே கட்சவ். இவர் தன்னிடம் பணிபுரிந்த ஒரு பெண்ணை செக்ஸ் உறவுக்காக கட்டாயப்படுத்தியதாக புகார் செய்யப்பட்டது. இதனால் அந்தப்பெண் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்...

வைகோ மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ரவிகுமார் மற்றும் பால் என்கிற இரண்டுபேர், இன்று புதன்கிழமையன்று தமிழகத் தலைநகர் சென்னையில் மாம்பலம் காவல்...

தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி

அமெரிக்காவில் அரிசோனா மாநிலம் பீனிக்ஸ் அருகே உள்ள ஹூவாசுகா நகரைச்சேர்ந்தவர் சார்லி பாஸ்லே. 39 வயதான இவர் தன் தந்தையுடன் சேர்ந்து வீட்டுக்கூரையை பழுது பார்த்தார். அப்போது அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள்...

விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்கு மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு

விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்கு மீது இலங்கை விமானங்கள் குண்டு வீசி தாக்கின.இலங்கையில் மாவிலாறு அணை தொடர்பாக விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்து தாக்கி வருகின்றனர்....

வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது TMVPஅதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது

வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவு அதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் முகாம் முற்றாகத் தகர்ப்பு .... (more…)

10 ஏவுகணைகளைச் செலுத்தி ஈரான் சோதனை!

ஈரான் நாட்டு ராணுவம் 10 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறது. இவை அனைத்தும் 80 கிலோ மீட்டர் முதல் 250 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்குகளை மட்டுமே தாக்கவல்ல குறுகிய தொலைவு...

அமெரிக்க கள்ள சந்தையில் புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல்-13 பேர் நிïயார்க் நகரில் கைது

அமெரிக்காவில் கள்ள சந்தையில் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முயன்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா கடந்த 1997-ம் ஆண்டு தடை விதித்தது. விடுதலைப்புலிகளுக்கு தமிழர் மறுவாழ்வு அமைப்பு (T.R.O)...

உக்ரைன் நாட்டில் ரஷிய விமானம் நொறுங்கி விழுந்து, 171 பேர் சாவு

உக்ரைன் நாட்டில், ரஷிய விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் 171 பேர் இறந்தனர்.ரஷியாவில் கருங்கடல் பகுதியில் உள்ள சுற்றுலா இடமான அனபா என்ற இடத்தில் இருந்து செயிண்ட் பீட்டர் பர்க் நகருக்கு, "புல்போவோ''...

202 பேரை பலிகொண்ட 3 தீவிரவாதிகளின் மரண தண்டனை தள்ளி வைப்பு

இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் உள்ள இரவு விடுதிகளில் கடந்த 2002-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 'ஜெமா இஸ்லாமியா' என்ற இயக்கத்தை...

எகிப்து நாட்டில் ரெயில்கள் மோதலில் 80 பேர் சாவு

எகிப்து நாட்டில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொண்டதில் 80 பேர் பலியானார்கள். மோதிய வேகத்தில் ஒரு ரெயில் தடம் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. எகிப்து நாட்டில் மன்சுரா என்ற ஊரில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி...

சேருவில கப்பல் சேவை ஆரம்பம்

திருகோணமலைக்கும் மூது}ருக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த சேருவில 2 பயணிகள் கப்பல் தனது சேவையினை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. மூது}ரில் இம்மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடாந்து இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது....

5800பேர் யாழ்ப்பாணத்திலிருந்து கப்பலில் கொழும்பு செல்ல பதிவு

யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து கொழும்;பிற்கு கப்பல் மூலமாக செல்வதற்காக 5800 பேர் வரை இதுவரை பதிவுசெய்துள்ளனர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தென்னிலங்கையில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் அவசர...

இஸ்ரேலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதா

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபிஅணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இஸ்ரேல் போர்நிறுத்த தீர்மானத்தை மீறிவிட்டதாகவும் அவர் கூறினார். லெபனான் நாட்டின் மீது முதலில் விமானத்தாக்குதலும், பிறகு தரைப்படைத்...

வடக்கே ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளன

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளதாகத் தெரிகின்றது. உக்கிரமான எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு தேடி பலர்...

பாலஸ்தீன துணை பிரதமர் கைது : இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

லெபனானுக்கும் இஸ்ரே லுக்கும் இடையே 35 நாட்களாக நடந்த போர் ஐ.நா. சபை மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே 5 நாட்களாக போர் நிறுத்தம் நீடித்தது. லெபனாலில் இருந்து...

மெக்சிகோவில் நில நடுக்கம்

மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடற்கரையில் நேற்றுஅதிகாலை திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. அது 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்க அதிர்வு மெக்சிகோ நகரிலும் உணரப்பட்டது. என்றாலும் சேதம் எதுவும் ஏற்படவில்லை....

கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்

கிழக்கு லெபனானில் பெக்கா பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இஸ்ரேலிய விசேட படைகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை நடத்தியுள்ளார்கள். ஐ.நா வின் போர் நிறுத்தம் திங்கட்கிழமையன்று அமலுக்கு வந்த பின்னர், நடைபெற்ற பாரிய சம்பவம் இது....

விமானப்படை குண்டு வீச்சு…

விமானப்படை குண்டு வீச்சு மூலம் விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறி உள்ளது. இலங்கையில் மாவிலாறு அணையை கைப்பற்றுவது தொடர்பாக சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின்...

பாகிஸ்தானில் மழை, சூறாவளிக்கு 15 பேர் சாவு

பாகிஸ்தானில் துறைமுக நகரமான கராச்சியில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழைக்கு 15 பேர் பலியாயினர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. சூறாவளியில் சிக்கி பல மின்கம்பங்கள் வேறுடன் சாய்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்...

துருக்கியில் சாலை விபத்து: 17 ஈரானியர்கள் சாவு

துருக்கியில் லாரி மீது பஸ் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 17 ஈரானியர்கள் உயிரிழந்தனர். சிரியாவில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள கேல்டிரான் நகருக்கு சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டு பஸ், எதிரே வந்த லாரி...

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை...

பிரிட்டனில் பாதுகாப்பை மீறி பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறிய சிறுவன்

பலஅடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி விமான நிலையத்துக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து சர்வதேச விமானத்தில் ஏறிவிட்டான் சிறுவன். இச்சம்பவம் லண்டனில் உள்ள கேட்விக் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது. மெர்ஸிசைட் என்ற இடத்தில்...

கொழும்பு பேரணியில் அமளி

கொழும்பு விகரமகாதேவி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை போர் எதிர்ப்பு முன்னணியினர் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த தேசிய பிக்குகள் முன்னணியினர் "இங்கு பேரணி அவசியமில்லை. கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைதிக்காக போராடுங்கள்' என்று...

யாழ். பகுதியில் கடும் சண்டை: 98 புலிகள் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் கடும் சண்டையை விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை தொடங்கினர். இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் 98 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிலாலி...

சரிகாவுக்கு தேசிய விருது! ராணி¬முகர்ஜிக்கு ஆப்பு!!

சிறந்த நடிகைக்கான தேசியவிருது பெற கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்களை...