சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும்!!(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், அண்மையில் நடந்து முடிந்துள்ள சிங்கப்பூர் சந்திப்பு, பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை, ஐ.அமெரிக்க - வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும்...

‘அடி மடியில் கை’!!(கட்டுரை)

மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய...

‘அதையும் தாண்டிப் புனிதமானது’!!(கட்டுரை)

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும்...

ஞானசார தேரருக்காக வளையுமா சட்டம்?(கட்டுரை)

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட விவகாரம், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளை, திரிசங்கு நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி...

‘பழைய குருடி கதவைத் திறவடி’!!(கட்டுரை)

நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து,...

மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா?(கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக்...

இரண்டு முக்கிய வழக்குத் தீர்ப்புகள்!!(கட்டுரை)

கடந்த வாரம் உயர் நீதிமன்றம், ஜனநாயகத்தின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான இரண்டு தீர்ப்புகளை வழங்கியிருந்தது. அவற்றில், ஒன்று தனிப்பட்ட ஒருவரின் நலன் சார்ந்த வழக்கு தொடர்பாகவும் மற்றையது, தேசிய ரீதியில் முக்கியமான ஒரு விடயம்...

மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா?(கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த்...

வழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்!!(கட்டுரை)

வழக்கு ஒன்று; தீர்ப்பு இரண்டு என்ற நிலை, தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களைப் பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்தது...

ஒரு பௌத்த துறவியின் தூது!!(கட்டுரை)

இலங்கைத் தீவானது புத்தருக்குச் சொந்தமானது. அது மூன்று இரத்தினங்களால் நிறைந்த திறைசேரியைப் போன்றது. அதனால் ஆதிகால இயக்கர்கள், இந்தத் தீவில் வாழ்ந்தது நிரந்தரமற்றதாக அமைந்ததைப் போலவே, தவறான நம்பிக்கையைக் கொண்டவர்கள், இந்தத் தீவில் வாழ்வதும்...

சொற்களின் அருவருப்பு!!(கட்டுரை)

மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரைத் தொடங்கி விட, ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் பொங்கி வழியும் காதல் இருக்கின்றது; முட்டாள்களிடமிருந்து மட்டும்...

கோட்டாவும் முஸ்லிம்களும்!!(கட்டுரை)

சிறிது காலத்துக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், முஸ்லிம்களைக் கவர முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒருவகையில் அவர்கள், முஸ்லிம்களைக் கவர முற்படுவதை விட, சில முஸ்லிம் அமைப்புகள், அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள முற்படுவதாகவும்...

வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள்!!(கட்டுரை )

ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த...

பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி!!(கட்டுரை )

இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு....

மக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்!!(கட்டுரை )

நல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவலாகவே காணப்படும் நிலையில், அண்மைய சம்பவங்கள் சில, அவற்றை மறுதலிக்கும் போக்கைக் காட்டி நிற்கின்றன. தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களைத்...

தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’!!( கட்டுரை)

தனியார் தொழிற்சாலைக்கு எதிரான 23 வருடகாலப் போராட்டம், இப்போது 13 பேர் உயிரிழந்த துயரமான துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது. இந்தச் சோகத்தின் பிடியில், ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி சிக்கித் தவிக்கிறது. ‘ஸ்டெர்லைட்’...

தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்!!(கட்டுரை)

“முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன்...

சர்வகட்சி மாநாடு: இணக்கமும் பிணக்கும்!!(கட்டுரை)

யுத்தம் தொடர்பாகப் பல்வேறுபட்ட தத்துவநிலை விளக்கங்களுண்டு. ‘நியாயயுத்தம்’ என்ற தத்துவ விளக்கமானது, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. நியாயயுத்தத்தை நாம், மகாபாரத காலத்திலும் காணலாம். மிகச்சுருக்கமாக, இதன் சாரத்தைக் கூறுவதென்றால், யுத்தம் என்பது தார்மீக...

மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்!!(கட்டுரை)

வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை...

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!!(கட்டுரை)

இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள், நீண்டகால இனமுரண்பாடுகள் மற்றும் அண்மைக் காலத்தில் மேலெழுந்து வருகின்ற இனத்துவ, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரமானதும், எல்லாத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றனர். முப்பது ஆண்டுகளுக்கும்...

பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்!!(கட்டுரை)

பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும். இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர்...

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன?(கட்டுரை)

இலங்கை அரசியல்வாதிகள் தாம், தமது இனத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே, அரசியலில் காரியம் சாதிக்கிறார்கள். வடபகுதி அரசியல்வாதிகள், எதை எடுத்தாலும் மற்றவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களைப் பாதிக்கும் என்றும், தாம் செய்யும் அனைத்தும் தமிழர்களுக்குச் சாதகமானது...

மாட்டிறைச்சியை முன்வைத்த பிணக்குகள்!!( கட்டுரை )

மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை, தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் முயற்சியொன்று கடந்த சில வருடங்களாக மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டிறைச்சியை முன்னிறுத்திய மத அடிப்படைவாதம், இந்தியா போன்று, இலங்கைக்கும் புதியதல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்காக...

பயனின்றித் தொடர்ந்த சர்வகட்சி மாநாடு: அதிகரித்த வன்முறைத் தாக்குதல்கள்!!(கட்டுரை)

1984 ஓகஸ்ட் மாதத்தில், வடக்கில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. வடக்கில் பொலிஸார், அரச படைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருந்தன. இதற்குத் தமிழ் இளைஞர்...

தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?(கட்டுரை)

அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம்....

உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு!!( கட்டுரை )

அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது....

ஆசையும் துயரங்களும்!!( கட்டுரை )

“எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே...

வட பகுதி நினைவேந்தல்களும் தென் பகுதி அச்சங்களும்!!( கட்டுரை )

சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறிய ஒரு கருத்து, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி...

‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்!!( கட்டுரை )

போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர்...

ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்!!(கட்டுரை)

உலகில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக...

கம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்!!(கட்டுரை)

வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி - மாற்றி விளையாடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும்,...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல!!(கட்டுரை)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் முட்டல் மோதல்கள் உருவாகியிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்!!(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது....

நிஜமாகாத கொள்கை அறிக்கைகள்!!(கட்டுரை)

இலங்கையில், 33 நாட்கள் மட்டுமே ஒரு அரசாங்கம் பதவியில் இருந்துள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கமே அதுவாகும். அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் சிம்மாசன உரை தோல்வியடைந்ததன்...

ட்ரம்ப்பின் முடிவால் பேராபத்து வருமா?(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கருத்துகளைத் துருவப்படுத்தக்கூடிய உலகத் தலைவர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். அவரது நாட்டில் மாத்திரமல்ல, சர்வதேச அரங்கிலும் கூட, அந்நிலைமை தான் காணப்படுகிறது. அவரால், இலங்கை நேரப்படி நேற்று (09)...

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்!!(கட்டுரை)

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில்,...

வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை!!(கட்டுரை)

மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால்,...

ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி!!(கட்டுரை)

அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடுவதென்று, கட்சிகள் பிடுங்குப்படத் தொடங்கி விட்டன. ஐ.தே.க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் ஆர்வத்தில் இருப்பதாகக்...

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்!!(கட்டுரை)

தேர்தல் விஞ்ஞாபனங்களும் கொள்கைப் பிரகடனங்களும், வாக்குறுதிகளும், உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதை, நமது யதார்த்த அரசியல் சூழலில் மிகக்குறைவாகவே காண்கின்றோம். ஏதோ ஒரு உற்சாகத்தில், உணர்ச்சி பிரவகித்து வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் அதன்பின்னர், உற்சாகம் அடங்கிவிட்டப் பிறகு...