Breaking News

நியூஸிலாந்து அமைச்சர் இலங்கைக்கு விஜயம்..!!

நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 39 தொன் பால்மாவிற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காகவே நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்....

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ… ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா..!!

தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.  சில...

புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!

கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை, தென்வன் மரபு அடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பல பொருட்கள்...

மறைந்த அமைச்சரின் சகோதரர் சடலமாக மீட்பு..!!

மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலத்தை...

முதலை முட்டை வைத்திருந்தவர் கைது..!!

களுத்துறை, ஹெட்டிமுல்ல பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 முதலை முட்டைகளை கைப்பற்றியுள்ள பொலிஸார், அவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்வன இனத்தைச் சேர்ந்த அரியவகை இரு முதலையினங்களை...

சைக்கிளில் சென்றவர் யானை தாக்கி மரணம்..!!

குருநாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லாவ பிரதேசத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் நேற்று காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...

மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் : விக்கினேஸ்வரன்..!!

தமிழ் மக்களின் உரிமைக்கான மூன்றாவது கட்ட போராட்டம் தற்போதுதான் ஆரம்பிக்கவுள்ளது. ஆயுதப் போராட்டத்தால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த மூன்றாம் கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி ஆனால் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும்...

மதில் உடைந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மதில் மீதேறியபோது நேற்று அதன் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...

கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி..!!

கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே...

ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க பென்டகன் முடிவு..!!

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நிர்வாகம் தனது இராணுவத்தில் பணிபுரியும் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு பிற இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை...

திருட்டுத்தனமாக மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்தவர் கைது..!!

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரிவில் திருட்­டுத்­த­ன­மாக மாடு அறுத்து இறைச்சி விற்­பனை செய்து வந்த குற்றம் தொடர்பில் நான்கு பிடியாணை­க­ளுக்கு தலை­ம­றை­வா­க­வி­ருந்து வந்த நப­ரொ­ருவர் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார். பொலிஸ் சார்­ஜண்ட் யூ.எல்எம். ஆப்டீன்...

தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்..!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் பஸ் கட்டணங்கள் பத்து வீதம்...

தந்தையை கோடாரியால் தாக்கிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!!

75 ஆயிரம் ரூபா  பணத்தை வழங்க மறுத்த தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த மகனுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் அமென்தா செனவிரட்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.   கண்டி  அங்கும்...

குழந்தைகளுக்கு பாலூட்ட மார்பகங்களை வாடகைக்கு விட தயார்:பிரான்ஸில் பெரும் பரபரப்பு..!!

பிரான்ஸில் உள்ள ஒரு பெண், ஓரின சேர்க்கையாளர்கள் தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு பாலூட்ட தன்னுடைய மார்பகங்களை வாடகைக்கு விட தயார் என அதிரடி அறிவிப்பு.. ஒன்று செய்துள்ளதால் பாரீஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய...

யுவதிகளுடனான தனது பாலியல் உறவை வீடியோ செய்து வைத்திருந்த பௌத்த பிக்கு கைது..!!

யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து  பொலி­ஸா ரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விஹா­ரையின் பிக்கு...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது: அமெரிக்கா..!!

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இச் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது...

பிரபாகரனை பிடித்த அரசுக்கு பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை ஏன் பிடிக்க முடியாது : முஜிபுர்

பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது..!!

சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் நகரில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான...

கனடா சிறுவர்களை கொன்ற பாம்பு செல்லப்பிராணி கிடையாது..!!

கனடாவின் நேற New Brunswick- Campbellton  எனும் இடத்தில் இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஆப்ரிக்க இன பாம்பு சட்டப்படி செல்லப்பிராணியாக வளர்க்க முடியாததென்றும் பதிவு செய்யப்படாததென்றும் தெரியவந்துள்ளது. இத்தகவல் மாகாண அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. Noah Barthe...

இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாமென்கிறது ஜே.வி.பி…!!

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை இராணுவத்தினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் படி ஜே.வி.பி.தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுள்ளது. வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதால் தமது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத...

வவுனியா பெண் லண்டனில் கொலை..!!

வவுனியா தவசிக் குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி எனும் பெண் லண்டனில் இனந் தெரியாதோரால் கொலை செய்யப் பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டு மேற்படிப்பை மேற்கொள்வதற்காக லண்டன்...

இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனத்தின் முதலாவது வெளிநாட்டு மின் உற்பத்தி நிலையம் சம்பூரில்..!!

இலங்கை மின்சார சபைடன் இணைந்து இலங்கையில் அனல் மின் நிலையமொன்றை இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனம் அமைக்கவுள்ளதாக இந்திய வலுசக்தி அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விடுத்த எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே...

யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸில் தமிழ் பாடலை ஒலிபரப்ப மறுத்ததால் முறுகல்…!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப மறுத்து சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற இந்த பஸ்ஸில், கொழும்பிலிருந்து பஸ் புறப்பட்ட...

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகத்தில் கைது..!!

தமிழ் நாட்டிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48பேரையும் இந்தியர் ஒருவரையும்  இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாகபட்டிணம் மாவட்டத்திலுள்ள வேளாங்கன்னி நகரில் நகரிலுள்ள நேற்று வெள்ளிக்கிழமை வைத்து இவர்கள் கைது...

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் புதிய வேகக் கட்டுப்பாடு..!!

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்திற்கும் அதிகமாக பயணிக்கும் சாரதிகளிடம் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் இது அமுலுக்கு வந்துள்ளது. அண்மையில் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற...

மனைவியைக் கொன்று பேஸ்புக்கில் படம், தகவல் பரிமாறிய நபர் கைது..!!

மனைவியைக் கொன்று, அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26....

கிராண்ட்பாஸில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்..!!

கிராண்ட் பாஸ்  பொலிஸ் பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். கிராண்ட்பாஸிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது தாக்குதல்...

வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும்: ஹக்கீம்..!!

வடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது...

கடலுக்கடியில் காட்சியளிக்கும் அதிசய ஆறு (VIDEO)

மெக்சிக்கோ நாட்டில் கடலுக்கடியில் ஓடும் ஆறு ஒன்று காணப்படுகிறது.இதனை Halocline என்று சொல்லுவார்கள். இருவேறு உப்புத்தன்மை உடைய நீர், அடர்த்தி வேறுபாட்டால் இப்படியான ஒரு அதிசய ஆற்றை உருவாக்கும். கடலுக்கடியில் படம்பிடிக்கின்ற புகைப்படப்பிடிப்பாளர் Anatoly...

இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை காணலாம்..!!

இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை நாளை முதல் மூன்று நாட்களுக்கு காணும் வாய்ப்புள்ளதாக கோள்மண்டல அதிகாரியொருவர் தெரிவித்தார். இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வடகீழ் வான்...

தனது காதல் மனைவியுடன் பொலிஸில் சரணடைந்த இலங்கை அகதி மாணவன்..!!

பெற்றோரால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இலங்கை அகதி மாணவரும் கேரளாவைச் சேர்ந்த அவரின் காதல் மனைவியும் இராமேஸ்வரம் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற கேரள மாணவியும்,...

ஆட்டோவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் கைது..!!

மாத்தறை கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரும் 20 வயது  இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவி ...

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!

போலி அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்து தங்­கைக்­காக க.பொ.த. உயர்­தர பரீட்­சையில் நடன பாடத்­துக்கு தோற்­றி­ய­தாக கூறப்­படும் கொலன்­ன பிரதேசத்தைச்  சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வரை எம்­பி­லி­பிட்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தினேஷ் லக்மால் பெரேரா பிணையில்  செல்ல...

திருமண பதிவுக்கு தயாரான நிலையில் காதலன் தலைமறைவு; தற்கொலை முயற்சியில் யுவதி காயம்..!!

திருமணத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்த போது காதலன் தலைமறைவானதால் கவலையடைந்த யுவதியொருவர் இ.போ.ச. பஸ்ஸின் முன்னால் பாய்ந்து  படுகாயமுற்று   பண்டாரவளை வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 5 ஆம் திகதி...

மத்­தள சர்­வ­தேச விமான நிலைய சேவை­யை விஸ்­த­ரிப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கை..!!

மத்­தல மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு விமான சேவையை விஸ்­த­ரித்து பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. அம்­பாந்­தோட்டை - மத்­தல பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச...

யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை வேறு எவரையும் விட அரசே கூடிய தடவை உச்சரித்துள்ளது; அரியநேத்திரன் எம்.பி…!

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகி விட்ட போதிலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விட அரசாங்கமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை அதிகமாக உச்சரிப்பதில் இருந்தே அந்தப் பெயரில் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது...

மணமகனாக நடித்து 10 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ‘மாப்பிள்ளை’ கைது..!!

பத்து இளம் பெண்­களை திரு­மணம் செய்­வ­தாக ஏமாற்றி அவர்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ததாக கூறப்­ப­டும் நபர் ஒரு­வரை கட்­டு­கஸ்­தோட் டைப் பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ள னர். பத்­தி­ரி­கைளில் போலிப் பெயரில் திரு­மண விளம்­பர...

கிராண்ட்பாஸ் குடுராணி கைது..!!

பிரபல பெண் போதைப் பொருள் விநியோகஸ்தரான “குடுராணி” கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு- கிராண்ட்பாஸிலிருந்து கண்டிக்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு சென்றிருந்த போதே 29 வயதான குடுராணி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் நேற்றுக் கைது...