வவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல்

வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (06-06-2006) பிற்பகல் 3.50 மணியளவில் வாகனத்;தில் சென்ற பொலிசார் மீது புலிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ளதோடு இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். அச் சமயம் வீதியால்...

சுவிஸ் செல்ல முற்பட்ட யுவதி நீர்கொழும்பு சிறையில் மரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். போலி கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி சுவிற்சர்லாந்திற்குச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வலிகாமம் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த...

B.J.P ராகுல் மகாஜன் கைது

மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் (31), மருத்துவமனையில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் சாப்பிட்டது, அதற்காக வீட்டைப் பயன்படுத்தியது, சாட்சியத்தை அழிக்க...

புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிசில் தஞ்சம்

புலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு, பாரிய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். (more…)

6 வது மாடியிலிருந்து குதித்து நடிகரின் மகள் தற்கொலை

பள்ளித் தேர்வு மோசடி புகாருக்கு உள்ளானதை அடுத்து 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் பிரபல திரைப்பட நடிகரின் 13 வயது மகள். டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. காவல்துறை வட்டாரங்கள்...

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்

யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு அருகியல் இன்றுகாலை 10.45மணிக்கு இராணுவத்தினர்மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இராணுவவீரர் ஒருவர் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு மத்திய அரசு பரிசு-வைகோ கிண்டல்

முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவருக்கு பரிசு கொடுத்துள்ளது மத்திய அரசு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல்,...

பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியது

பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் கண்ணன் தலைமையிலான பாண்டிச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கண்ணன் கட்சி தேர்தலில் போட்டியிட்டது....

யாழ் வேலணையில் படுகொலை

யாழப்பாணம் வேலணையில் இன்று அதிகாலை (06-06-2006) 4.30 மணியளவில் இருவர சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளே இப்...

இந்தோனேசிய பூகம்ப சாவு 5782

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5782 பேர்தான் இறந்தனர் என்று அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் 36300 பேரே காயம் அடைந்தனர். 46 ஆயிரம் பேர் காயம் அடைந்ததாக முன்னர் வெளியான...

ஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக விதித்துள்ள சில வர்த்தக தடைகளை முழுமையாக நீக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. செறிவூட்டிய யுரேனியம் தயாரிப்பதை ஈரான் கைவிட்டால், உடனடியாக, வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை கொண்டுவர அமெரிக்கா தயாராக...

ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்

கிரீஸ் நாட்டில் சினிமா பாணியில், ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள். கிரீஸ் நாட்டில் கடத்தல், வங்கிக் கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வஸ்சிலீஸ் பலேக்கோஸ் டாஸ் என்பவருக்கு 25...

வாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை

வாழைச்சேனை கல்மடு வீட்டுத் திட்டத்தில் நேற்று மாலை (05-06-2006) 4.30 மணியளவில் புலிகள் இராணுவத்தினர் மீது கிளேமோர் தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தபோது தகவல் கிடைத்த இராணுவத்தினர் அங்கு சென்றவேளையில் புலிகள் கிளேமோர்...

அமிதாப்பச்சன் மனைவி டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு

அமிதாப்பச்சன் மனைவி பச்சன் ஜெயா அமிதாப் ஆதாயம் தரும் இரட்டை பதவி பிரச்சினை காரணமாக தனது டெல்லி மேல்-சபை எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநில சட்டசபையில் இருந்து 2 பேர் டெல்லி மேல்-சபைக்கு...

சீனாவில் புயல் மழைக்கு 29 பேர் பலி

சீனாவின் தென் பகுதியில் உள்ள பிïஜியன் மாநிலத்தில், பெய்த கனமழை, புயல் காரணமாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் 19 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. 22 பேர் வெள்ளத்தில் மூழ்கிச் செத்தனர். (more…)

ஈராக்கில் 50 பேர் கடத்தப்பட்டனர்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்து கம்பெனிகளின் தொழிலாளர்கள் 50 பேரை போலீஸ் சீருடையில் ஆயுதம் தாங்கி வந்தவர்கள் கடத்தினார்கள். சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு போக்குவரத்து வசதியைச் செய்து தரும் கம்பெனிகள்...

கொழும்பு புறநகர் பகுதியில் கிளேமோர்

கொழும்பு புறநகர் பகுதியான(நீர்;கொழும்பு, கட்டுநாயக்கா விமானநிலையம் செல்லும் பிரதான வீதி)றாகம வீதி மாபொல என்ற இடத்தில் இன்று (06-06-2006) அதிகாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலில் இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான பஸ்...

மன்னார் நானாட்டில் கைக்குண்டுத்; தாக்குதல்

மன்னார், நானாட்டான், எரிவிட்டான் பகுதியில் நேற்று (05-06-2006) பிற்பகல் 3.30 மணியளவில் இராணுவத்தினர் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்; தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்பு புலிகளுக்கும் படையினருக்கும் இடையே துப்பாக்கிப்...