நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகள் தாக்குதல்!

நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை 10:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தூதரகத்தின் யன்னல் கண்ணாடிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தூதரகத்தின் பிரதான உடைத்துக் கொண்டு உள்நுளைந்ததும்...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!

இன்று காலை 7:45 மணியளவில் முள்ளிவாய்க்கால் அரச வைத்தியசாலை மீது ஏவப்பட்ட எறிகணை தாக்குதலில் சிக்குண்டு 26நோயாளிகள் உடன்பலியானதோடு, மேலும் பலர் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வேறு...

இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் -சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்

இலங்கையில் மோதல் காரணமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் தொடர்பில் ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என பிரபலமான சர்வதேச அமைப்புக்கள் நான்கு ஜப்பானிய பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளன. இலங்கை...

யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிவில்...

ஒருவாரகாலத்தின் பின் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின..

மட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவாரகாலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பின கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா வயது 08 பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை...

டேவிட் மிலிபாண்ட் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் -இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவிபொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப்பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில்...

புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது

புலிகள் எனக் கூறி கப்பமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவரை விஷேட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களுடன் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இவர்கள் தங்களை...

புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..

புகழ்பெற்ற இசைத் தம்பதியரான தயாரட்ண ரணதுங்க மற்றும் அவரது துணைவி அமரா ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்த ரூபவாஹினி நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் ரூபவாஹினியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் காலை ஒன்பது மணிமுதல் பத்து...

லண்டனில்; போராட்டம் நடத்தும் தமிழர்களால் பிரிடிஷ் நாடாளுமன்ற சதுக்கம் முற்றுகை.. சபாநாயகர் அதிருப்தி

பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் லண்டனில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம,; பேரணிகளுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக....

தமிழ் கட்சிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு முகாம்களுக்கு விஜயம்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிளைக் கொண்ட ஆலோசனைக் குழு இந்த வாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்குச் செல்லவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும்...

புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தவர் கண்டியில் கைது

கண்டி பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் வைத்திசாலை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புற்றுநோய்ப் பிரிவில்...

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். புல்மோட்டையிலிருந்து நேற்றுக்காலை 6மணிக்கு புறப்பட்ட மேற்படி கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மாலை 4.30க்கு திரும்பி இரவு...

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி

ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரொருவரை தெல்தெனிய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்

கடற்புலிகளின் இரண்டாவது தலைவரான செலியன் மோதலின் போது கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இறுதி பாதுகாப்பு அரணையும் அழிக்கும் நோக்கில் முன்னேறிய...

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் 31 சடலங்களும் பெருந்தொகை ஆயுதங்களையும் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்காலில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை...

புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?

புலிகளின் படைத்துறை பேச்சாளராக செயற்பட்டுவந்த மார்சல் என்று அழைக்கப்படும் இராசைய்யா இளந்திரையன் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்துள்ளதாக புலிகள் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வி...

யுத்த சூன்யவலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன –கருணாஅம்மான் தெரிவிப்பு

யுத்த சூன்ய பிரதேசத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். பெருமளவிலான சாதாரண பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக...

பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்து!!

இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சனல்4 ஊடக நிறுவத்தின் ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்களே இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு ஊடகவியலாளரான ஊடகவியலாளர் நிக் பெற்றன் வோல்சன்...

கிழக்கு சிறுவர் படுகொலையுடன் ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு -பிரதி காவல்துறை மா அதிபர்!

கிழக்கில் இடம்பெற்று வரும் சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமிழ் மககள் விடுதலைப் புலி (ரிஎம்விபி) உறுப்பினர்களுக்கு நேரடித் தெடர்பு காணப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்;துள்ளார் இச் சம்பவங்கள் தொடர்பில்...

பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்..

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் தப்பிப்பதற்காக தயாராக இருந்த நீர்மூழ்கியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். வன்னிபகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் மேஜர் ஜெனரல் ஜகத்ஜெயசூரியா தலைமையிலான படையினர் சோதனை நடத்தினர். அங்குலம், அங்குலமாக நடந்த...

இலங்கைக்கான ஐ.நாஇன் தூதுவராக பில் கிளின்டன் அல்லது கொபி அனானை நியமிக்குமாறு கோரிக்கை

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் அல்லது முன்னாள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் கொபி அனானை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமெரிக்க...

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)

முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது...

அக்கரைப்பற்றில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி 11பேர் காயம்

அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் 4மாணவர்கள் உட்பட 11பேர் காயமடைந்துள்ளனர் உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்...

மட்டக்களப்பில் நான்கு இளைஞர்கள் காணவில்லை மேலும் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..

மட்டக்களப்பு நகரில்வைத்து 4தமிழ் இளைஞர்கள் கடந்த 3ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் அத்துடன் வவுணதீவு இளம் விவசாயி ஒருவர் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் அதேதினத்தில் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமைகள்...

தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலை: வெசா தினமன்று புதிதாக பிரதிஷ்டை..

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ...

இந்திய வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்..

எதிர்வரும் வாரத்தில் மேலும் ஒருதொகுதி வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணங்கியிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அத்துலஹாந்த லியனகே தெரிவித்துள்ளார். மோதல்ப் பகுதியிலிருந்து வரும்; பொதுமக்களின் நலன்கருதியே இந்திய வைத்தியர்கள் இலங்கைக்கு...

புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி – ரணில்

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு இந்தியா முழு அளவில் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கா தகவல் வெளியிட்டுள்ளார். 'ரைம்ஸ் நௌ'...

சனல்-4 ஊடகவியலாளர் நாடு கடத்தப்பட்டார்

லண்டனைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் இலங்கை அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப் பட்டிருக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்கள்...

வானூர்தி ஒன்றும் உலங்குவானூர்தி ஒன்றும் புலிகளிடம் தற்போதும் உள்ளது -புலனாய்வுத்துறை தகவல்

இரண்டுபேர் செல்லக்க்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றுமொரு வானூர்தியும் விடுதலைப்புலிகள் வசம் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இவற்றை...

வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..

வன்னியில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எதிராக அதிகளவான தற்கொலை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினர் தற்கொலைத்தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்...

புலிகளின் கடைசிக் காவல் அரணையும்; கைப்பற்றி விட்டதாகப் படையினர் அறிவிப்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்ததாகப் கருதப்படும் விடுதலைப் புலிகளின் கடைசிச் சுரங்க காவலரணும் கைப்பற்றப்பட்டது என இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது வெள்ளை முள்ளிவாய்காலுக்கு தெற்கே விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசிச் சுரங்கக் காவலரண் படை;யினரால் கடும் சண்டையின்...

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி எண்மர்காயம்

கொழும்பு மாளிகாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில்இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் ஜூம்ஆ தொழுகையின்பின்னர் அந்த பிரதேசத்திற்கு  வந்த மூகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த...

ஆறு சதுரக் கிலோமீட்டர் பிரதேச பாதுகாப்பு வலயப்பகுதி இரண்டரைக் கிலோமீட்டராக மாற்றம்.. -இலங்கை இராணுவம் அறிவிப்பு!!

இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப் பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது இதற்கு முன்பு வரையறுக்கப் பட்டிருந்த பாதுகாப்புப் பிரதேசமானது தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது அங்குள்ள பொதுமக்கள்...

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி

அரசங்கத்தின் வரைமுறை கட்டுப்பாடுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுமானால் அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய தொழில்படும்...

அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ள 350 கர்ப்பிணித் தாய்மார்..

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்...

யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் கனடா வலியுறுத்து

இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனொன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமை தாம் தெரிவித்திருந்ததை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மோதல்ப்...