மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும்...

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற,...

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்!!

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது...

காவிரிப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு!!

‘பூஒன்று புயலானது’ என்பது போல், தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையில், 93 வருடமாகப் போர்க்களத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த காவிரிப் பிரச்சினைக்கு, இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. தமிழகத்தின் பங்கான, 192...

சர்வகட்சி மாநாட்டில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு!!

அமிர்தலிங்கத்தின் அழுத்தமான நிலைப்பாடு சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், முதலில், இந்நாட்டிலிலுள்ள தமிழர்கள், ஒரு தனித்தேசம் என்பதை நிறுவினார். அதைத் தொடர்ந்து, இனப்பிரச்சினையின் வரலாறு, அதன் திருப்புமுனைகள், அதன் சமகால அமைவு என்பவற்றை மேற்கோள்காட்டி,...

பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும்!!

இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது. உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச...

மஹிந்த இருந்த இடத்திலேயே; ​​ஐ.தே.க தான் சரிந்தது!!

கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன...

தேர்தலில் யார் தோற்றார்கள்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித்...

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்!!

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும்,...

The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்!!

உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது?...

அம்பலமான உண்மை முகம்!!

‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி...

தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?

“யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப்...

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள்!!

‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’...

இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!

சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம்...

நல்லாட்சியும் மலையக மக்களும்!!

1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக்...

வெறும் விழலுக்கு இறைத்த நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த...

மும்முனைப் போட்டிக் களம்!!

என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தெற்கின்...

ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?

வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது...

‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்சி தான் தீர்வு’

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்....

சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும்...

அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும்...

‘பத்மாவதி’யும் வாக்கு வங்கி அரசியலும்!!

வன்முறைகள், கலவர மேகங்கள் சூழ ‘பத்மாவதி’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. 190 கோடி ரூபாய், பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் போன்றவர்கள்,...

அடையாளத்தை தொலைத்தும் மறந்தும் போன இனம்!!

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்கில் பௌத்தம் பற்றிய சில முக்கிய கருத்துகள் உள்ளன. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றையும் அந்தப் இனப்பிரச்சினைக்கான, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக...

ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி!!

மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும்...

பொன் வண்ண மயில்கள்!!

ஓவியாவுக்கென ரசிகர்கள் எதற்கும் தயாராய் இருக்கிறார்கள். ஓவியா ஆர்மி என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது. ரசிகர்களே நலம் விரும்பிகளாகவும் மாறி சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் நல்ல குணங்களை இன்றைய பெண்களோடு இணைத்தும், ஒப்பிட்டும்...

தேர்தல்கால வாக்குறுதிகளால் ஏமாற்றும் வியூகம்!!

ஏமாற்றங்கள் வாழ்வில் பொதுவானவை. அதீத எதிர்பார்ப்புகள்தான், தனிப்பட்ட வாழ்வில் அதிகமான ஏமாற்றங்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. ஆனால், ஒரு சமூகம் ஏமாற்றப்படுவதை, அதுவும் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதை, ஒரு சர்வ சாதாரணமான விடயமாக எடுத்துக்...

அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்!!

“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார...

பி​ரச்சினைகள் கருக்கொள்ளும் வெறுப்பு பேச்சுகள்!!

வெறுப்புப் பேச்சு என்பது ஒரு தனிநபரையோ அல்லது குழுக்களையோ, மதம், நிறம், தேசியம், பால், பாலின நோக்குநிலை, அங்கவீனம் அல்லது வேறு விதமான விரோதத்ததைத் தூண்டும் பேச்சுகளே வெறுப்புப் பேச்சுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. குறித்த...

வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும்!!

போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது. இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப...

உள்ளூராட்சி சபைத்தேர்தல்: சிதறப்போகும் தமிழ் வாக்குகள்? – நிலாந்தன்..!! (கட்டுரை)

இம்முறை தமிழ்ப்பரப்பில் நான்கு அணிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. முதலாவது தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும், இரண்டாவது சுரேஸ் – சங்கரி அணி, மூன்றாவது கஜன் அணி, நான்காவது தென்னிலங்கை மையக் கட்சிகளும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைகளும்....

சுமந்திரன் சுற்றும் வாளும், அகப்படும் ஊடகங்களும்.. -புருஜோத்தமன் தங்கமயில் (சிறப்புக் கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி, இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கின்றது. ஒரு...

கொடிய ஆயுதங்களோடு வென்றோரும் புனித ஆன்மாக்களோடு தோற்றோரும்..!! (கட்டுரை)

கடந்த வருட இறுதிப் பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘எலிய’ என்ற சிங்களப் பெயரை உடைய ‘ஒளி மயமான அபிலாஷைகள்’ என்ற தமிழ்க் கருத்து கொண்டதுமான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது....

‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்..!! (கட்டுரை)

இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை...

ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்..!! (கட்டுரை)

அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை. ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம். அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான...

அரசாங்கத்தின் இருப்புக்கு சவாலாகிவிட்ட பிணைமுறி அறிக்கை..!! (கட்டுரை)

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் 2015 ஆண்டு கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம்...

முன்னணியின் முக்கியமான மாற்றம்..!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத்...

மனவுறுதியின் மகிமை..!! (கட்டுரை)

அம்பன்கங்கை நீருற்று அம்பன் கங்கையே, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீருற்று ஆகும். அம்பன் கங்கை நீரினால், ரஜரட்ட வயல் நிலங்களைச் செழிப்படையச் செய்தல் பற்றிய வரலாறு, 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். கி.பி முதலாம் நூற்றாண்டில், எமது...

கருணாநிதி – ரஜினி சந்திப்பு: தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா?..!! (கட்டுரை)

திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) தலைவர் கருணாநிதியை, சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தமை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போகிறவர், இன்னோர் அரசியல் கட்சியின் தலைவரைச் சென்று சந்தித்துள்ளமையை,...