Breaking News

சங்கிலிகளால் பிணைத்து உண்ணாவிரதம்: வீரவன்சவின் உறுப்பினரும் இணைவு

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளார். கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று...

சிறுவர் இல்ல சிறுவன் உயிரிழப்பு

கிளிநொச்சி 'காந்தி' சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் உடல்நலக் குறைவினால் திடீரென இன்று உயிரிழந்துள்ளார். பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் காந்தி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மேற்படி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு...

2013-ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த, சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன்

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்....

(PHOTOS) “ஜூனியர் விகடன்” நிருபர் மகா.தமிழ் பிரபாகரன், இலங்கையில் கைது!!

கொழும்பு: ஜூனியர் விகடன் வாரஇதழின் நிருபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற...

கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

கிறிஸ்மஸ் தினமான நேற்று இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவு, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் 18ம் கட்டைப் பகுதியில், இடம்பெற்ற விபத்தில்...

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரை கண்டுபிடித்து...

முகம் சுழிக்க வைத்த கொலவெறி நடிகர்!

கொலவெறி நடிகர் ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் பெரும்பாலும் ஒளிப்பதிவாளரை ஓரங்கட்டி விட்டு இவரே படப்பிடிப்பை நடத்துகிறாராம். அவ்வாறு இவர் இயக்கும்போது உதவி இயக்குனர்களை வேலை வாங்கும் விதம் படக்குழுவினரை...

முஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் கோரிக்கையை சிந்து உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பர்வேஸ் முஷாரப் மீது பேநசீர் புட்டோ கொலை வழக்கு, பலு சிஸ்தான்...

பொலிஸ் – மக்கள் மோதலை தொடர்ந்து இருவர் கைது

மொரட்டுவ - அங்குலானை பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அங்குலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேச...

24 மணிநேர விபத்துகளில் ஒருவர் பலி; 279 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் பலியானதுடன் 279 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச்சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது...

புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்த துப்பாக்கியை தயாரித்தவர் மரணம்!

1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை...

பொலிஸாருக்கு முன் நிர்வாணமாக நின்ற பெண்

அம்பலாங்கொடை, வளவை தோட்டத்தில் கஞ்சா சுற்றிவளைப்புக்காகச் சென்ற பொலிஸார் பாரிய பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்தனர். குறித்த பகுதியில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பெண்ணொருவர், திடீரென தனது ஆடைகளைக்...

குடும்ப அரசியலால் குழம்பிப் போயுள்ள தமிழ்மக்கள்..! -நெற்றிப்பொறியன்

வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் சத்தியலிங்கம் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். இவர் மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக...

கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியை, அடிக்கப் பாய்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கட்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று சிவசக்தி ஆனந்தன் அவர்களின்...

தேசியகொடி விவகாரம்: ஆஸி பிரஜைக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜையான ஜெஃப்ரி டொப்ஸ் என்பவருக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பல ஆடம்பர ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன. பொதுநலவாய...

(PHOTOS) 2013 – ஹீரோயின்கள்: -அவ்வப்போது கிளாமர்-

2013ம் ஆண்டைப் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளுக்குப் படங்களே இல்லை… சிலர் எடுபடாமல் போனார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அவருக்கான முதலிடம் தமிழில் அப்படியே இருப்பது ஆச்சர்யம்தான்....

இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியாக சித்தரித்த நபர் தமிழகத்தில் கைது

திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ., பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர். திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25; எம்.பி.ஏ., பட்டதாரி. தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குப்பாண்டம்...

வருத்தப்படும் “ரொம்ப பிசி” நடிகர்!

தற்போது உள்ள ஹீரோக்களில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் சுமார் மூஞ்சி குமாராம். அவர் நடித்து முடித்த சீட்டுகட்டு படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளாதாம். ஆனால் தியேட்டர் தான் கிடைக்கவில்லையாம். இந்தப்படத்தை இந்த...

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்..

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்; இரு ஆபிரிக்கர்கள் கட்டுநாயக்கவில் கைது- சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் இருவர் கட்டுநாயக விமான நிலையத்தில்...

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் மரணம்

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த கோமஸ் மேரி நிரோஜனி (வயது 24) எனும் 40 நாள் குழந்தை...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. புதிதாக தொடரப்பட்ட தேசதுரோக...

இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!

ஒரு படத்தில் மட்டும் தலையை காட்டி விட்டு மேக்கப் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த மனம் கொத்திய பறவை நடிகை, தற்போது அலர்ஜியெல்லாம் சரி செய்து விட்டு புத்தம்புது பொலிவுடன் நடிக்க களம் இறங்குகிறாராம். அவரை...

நாணய தாள்களுடன் இருவர் கைது

4 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலி மற்றும் கெமேரோன் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க...

மின் தாக்கி ஒருவர் மரணம்

சிலாபம், காக்கைபள்ளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் கடமையாற்றிவருகின்ற ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். சிலாபம், பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ரோஹித திசேரா என்பவரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இறால் பண்ணையில்...

எம்.ஜி.ஆர் மறைந்து இன்றுடன் 26 வருடங்கள்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி தேவதையின் வீரமைந்தன், தர்மத்தாயின் தலைமகன், அவர்கண்ட வெற்றிகளை, படைத்த சாதனைகளை உலகமே கண்டு வியக்கின்றது. தமிழ்க் கலையுலகில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, திசையறியாது, வாழ்க்கைக் கடலில்...

ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்ற ‘பேய்க்கு’ விளக்கமறியல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் 'விசாரணைக் கூண்டில் வைத்து 'பேயாடிய' (கலையாடிய) சம்பவமொன்று தம்புத்தேகம நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. தனது ஐந்து பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி சந்தேகநபர் தம்புத்தேகம நீதவான்...

காதலியை கொன்று, தலையை துண்டித்த காதலன் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தியால் ஆத்திரம்: காதலியை கொன்று தலையை துண்டித்த காதலன் கைது- தமிழ்நாடு திருச்சி தில்லைநகர் தென்னூர் வாமடம் ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள தண்ணீர் குட்டையில் கடந்த 18–ந்தேதி 25 வயது மதிக்கத்தக்க...

கனடாவில் கடும் பனிப்புயல்: 11 பேர் பலி

கனடாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக டொரொன்டோ மற்றும் கிழக்கு மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிப்புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும்...

நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல்: 21பேரும் பிணையில் விடுதலை

மன்னார், நானாட்டான் பிர­தேச செய­லகம் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் பிணையில் விடு­வித்­துள்ளார். தலா 10 ஆயிரம்...

தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை

வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து...

வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை

கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

யாழ். சாவகச்சேரி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், அதே திசையில் பயணித்த பாதசாரி...

கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்

கவுதமியுடன் சேர்ந்து வாழ் வது ஏன் என்றதற்கு முதல்முறையாக பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன். சரிகா பிரிவுக்கு பிறகு கவுதமியுடன் சேர்ந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது...

சிரியாவில் விசாரணை காவலின் போது மரணம் அடைந்த, இந்திய டாக்டரின் பிரேதம் இங்கிலாந்து வந்தடைந்தது

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி!

கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி...

(PHOTOS) களுவாஞ்சிகுடியில் வீசப்பட்ட சிசு மீட்பு..!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர், நாகபுரம் பகுதியில் உள்ள பற்றைக்காடு பகுதியில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு ஒன்று உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாகபுரம்...

குரங்குகளை விரட்டிய சிறுமி மின்மாற்றியில் விழுந்து மரணம்

வீட்டின் மேல் மாடியில் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த குரங்குகளை விரட்டிக்கொண்டிருந்த சிறுமியொருவர் மின்மாற்றியின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கத்திற்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கினிகத்ஹேனையில் இடம்பெற்றுள்ளது. கினிகத்ஹேன சிங்கள மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில்...

கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! (அவ்வப்போது கிளாமர்)

மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில்...

கனடாவில் ‘செம’ பனிப்புயல்: “கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?”

நமது தமிழக வாசகர்கள் “அம்மா நல்லாட்சியில் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை” என்று அங்கலாய்க்கிறீர்களே… இங்கே கனடாவில் நம்ம கதி தெரியுமா? கடந்த 24 மணி நேரமாக டொரண்டோ நகரில் பல...